Select Language : Tamil | English
 
 

glowingmetta.com psychological postive psychology counselling therapy
GlowingMetta.Com

 
   
 

About GlowingMetta.com
Unlock your happiness

Psychologist S.Manimaran Jaffna

Life Coach & Psychologist S.Manimaran

உளவியல் மற்றும் மனித நடத்தை மாற்றம் சம்பந்தமான கல்விநெறிகளைக் கற்றுவந்தபோது என்னை மிகவும் கவர்ந்தது பொசிட்டிவ் சைக்கோலஜி என்று புதிதாக வரைமுறைப்படுத்தப்பட்ட துறை. பண்டைய வாழ்வியல் வழிகாட்டல்கள் பலவற்றில் இருந்த விஞ்ஞான வழிமுறைகளை ஆராய்ந்து உருவாக்கப்பட்ட ஒரு கலை மற்றும் விஞ்ஞானக் கூட்டு என இதைச் சொல்லலாம். பௌத்த கலாச்சாரத்தில் காணப்படும் பெறுமதிமிக்க மைன்ட்புல்னஸ் மற்றும் விபாசனா யோகா போன்றவற்றின் பெறுமதியை உணரச்செய்தவர் எனது பேராசிரியர் சரத் சந்திரசேகர அவர்கள்(SriLankan International Buddhist Academy,Kandy). தனது புத்திசாலித்தனத்தாலும் கற்பித்தல் முறையாலும் எனக்கு பொசிட்டிவ் சைக்கோலஜி துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் உளவியலாளர் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழ வருகைதரு விரிவுரையாளர் ஹிருத்திகா சந்திரசேகர் (Clinical Psychologist)அவர்கள்

எனது 17 வயது முதலே புத்த மதத்தின் சித்தாந்தங்கள் பலவற்றைத் தேடிக் கற்று அவற்றை இந்தியப்பெருங்கண்டத்தை அடிப்படையாக வைத்துப்பிறந்த பல தத்துவக் கொள்கைகளோடு ஒப்பிட்டு சிந்தித்து வந்த அனுவம் உண்டு. பண்டைய தமிழர்கள், இந்துக்கள்(இது பல கொள்கைகளின் கூட்டு), புத்த மதத்தவர்கள் ஆகியோரின் பல அற்புதமான மனவளக் கலைச் சிந்தனைகளையும் இந்த பொசிட்டிவ் சைக்கோலஜி என்ற துறை பயன்படுத்துகிறது. பல தியான முறைகள் புத்த மதப்பின்னணியை உடையவை.

கலைமாணி மற்றும் வணிக முகாமைத்துவத்தில் முதுமாணி உட்பட்ட சில பட்டப்படிப்புக்களுடன் தன்னார்வம் காரணமாக, மனிதர்களின் நடத்தை மாற்றக் கல்வியை மலேசியாவில் பெற்று அங்கும் பின்னர் இலங்;கையிலும் 15 வருடங்களுக்கு மேலாக மனிதர்களின் நடத்தை மாற்றத்திற்கான மென்திறன் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்த அனுவம், உளவியலை மேலும் கற்கத்தூண்டியது. கவுன்சிலிங் சைக்கோலஜி டிப்ளோமாக் கல்வி நெறியை கண்டியிலுள்ள சிபா சர்வதேச உயர்கல்வி நிறுவனத்தில் கற்று, பின்னர் அங்கு விரிவுரையாளரகவும் பணியாற்ற முடிந்தது. பிரித்தானிய அரச துறை வழங்கிய உளவியல் முதலுதவிப் பயிற்சி நெறி முதல் காலத்துக்குக் காலம் பல சிறு சிறு பயிற்சிகளிலும் கலந்துகொண்டு எனது மனித மனமும் அதன் வளப்படுத்தலும் சார்ந்த தேடலைத்தொடர்நதேன். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்ற உளவியல் பட்ட மேற்படிப்புத்தான் எனக்கு 'பொசிட்டிவ் சைக்கோலஜி' என்ற துறையில் மிகை ஆர்வத்தை தூண்டச் செய்து, அத்துறையையே எனது வாழ்நாள் ஆய்விற்கும் அனுவத்திற்கும் உரிய துறையாக தெரிவு செய்ய வைத்தது. எனது அண்மைய கல்வி மனித நடத்தை மாற்றத்தில் - அதுவும் மன அழுத்த நீக்க சிகிச்சை முறைகளில் விஞ்ஞான முதுமாணியாக அமைந்துள்ளது.

வெறும் பட்டப் படிப்புக்கள் எவரையும் எந்தத்துறையிலும் நிபுணராக மாற்றிவிடாது. எனது விருப்பமும் பயிற்சியும் உளவளத்துணை மற்றும் நடத்தை மாற்றம் சார்ந்து ஒரு தசாப்தற்கும் மேலான அனுபவத்தைத் தந்துள்ளது.

நான், சற்குணநாதன் மணிமாறன் மனதை வளப்படுத்த விரும்புவர்களுக்கு உதவ விரும்புகிறேன். அதே நேரம், இதுதான் எனது முதன்மைத் தொழிலாகவும் இருக்கிறது. பிடித்த துறையையே தொழிலாக வரித்துக்கொண்டால் மகிழ்ச்சியும் - மேலதிக அறிவும் வளர்ந்து கொண்டே இருக்குமல்லவா?.

இலங்கை போன்ற நாடுகளில் உளவியல் ஆற்றுப்படுத்தல் என்ற கருதுகோள் தெளிவானதாக இல்லை. மக்கள் அவற்றின் முக்கியத்தை அறிந்திருப்பதும் மிகவும் குறைவு. இதனால் கவுன்சிலிங் செல்லுதல் என்பதை பைத்தியத்திற்கு வைத்தியம் பார்ப்பது போல் எண்ணும் மனநிலையும் உண்டு.

எமது சேவைகள் கவுன்சிலிங் என்ற துறையின் பெறுமதி அறிந்த நபர்களுக்கே வழங்கப்படுகிறது. கனடா, இங்கிலாந்து, ஆஸ்த்திரேலழயா போன்ற நாடுகளில் வசிக்கும் எனது நண்பர்களில் பலர் வாழ்வில் ஒரு தடவையாவது கவு ன்சிலிங் சென்றிருக்கிறார்கள். (உதா : நிறுவனம் விட்டு நிறுவனம் மாறும்போது ஏற்படக்கூடிய மனச்சோர்விற்குக் கூட அங்கு கவுன்சிலிங் வழங்கப்படும். )

நீங்கள் எங்கிருப்பினும் எங்கள் சேவைகளை முற்பதிவு செய்து ஒன்லைன் ஊடாகப் பெற முடியும்.

என்னைத்தொடர்பு கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவும். வேறு வழிவகைகளில் என்னைத்தொடர்பு கொள்பவர்களுக்கு கவுன்சிலிங் சார்ந்த உதவிகள் வழங்கப்படாது. இது ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடு பல கோட்பாடுகளுக்கும் நெறி முறைகளுக்கும் உட்பட்டது.

நன்றி.

Satkunanathan Manimaran
Psychologist |
MSc(Applied Psychology & Behaviour Change),MBA(UK),PGD(Psychology),Dip(Counseling Psychology),PFA(UK)

"Offering a calm, confidential space where personal change is nurtured through science-backed, client-focused counselling strategies"


Contact GlowingMetta.com

 

 

 

 
 

 
  GlowingMetta.com